
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ச அத்தநாயக்க (12 மார்ச்) வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.
அதன் ஒரு நிகழ்வாக வவுனியா நாற்சதுர சுவிசேச சபையின் தலைமை போதகர் பி.என். சேகர் அவர்களை சந்தித்து உரையாடியிருந்தார்.
இச்சந்திப்பில் மதத்தலைவர்கள் மத்தியில், நல்லிணக்கமும், சகவாழ்வையும் ஏற்படுத்தல்,
நுல்லிணக்கம் சகவாழ்வுக்கான ஒரு ஆணைக்குழுவை ஏற்படுத்தல்.
பொலிஸ், அரசாங்க அதிகாரிகள் சமூகத்தோடு நல்ல உறவைகட்டியெழுப்ப கூடிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குதல்,
கிராம மட்டங்களில் மதநல்லிணக்கம், சகவாழ்வு போன்றவற்றை கட்யெழுப்ப மதத்தலைவர்களுக்கு நிதிஒதுக்குதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.
நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
- இலங்கை செய்திகள், செய்திகள்
- March 13, 2022