44 வயதில் ஏன் திருமணம் செய்தேன்- நடிகையின் பிரமிக்க வைத்த பதில்

தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த சூர்ய வம்சம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா. அதன்பிறகு ரஜினியின் படையப்பா படத்தில் நடித்து ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றார்.

அதன்பிறகு ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
44 வயதில்; ஏன் திருமணம் செய்தேன்- பிரமிக்க வைத்த நடிகையின் பதில்
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அருவி தொடரில் நடித்துள்ளார்.

இவருக்கு அண்மையில் பிரசன்னா என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. அவரது திருமண புகைப்படங்கள் வெளியாக 44 வயதில் நடிகையின் திருமணம் என செய்திகள் பரவின.

தனது திருமணம் குறித்து லாவண்யா ஒரு பேட்டியில் கூறும்போது, நடிப்பில் கவனம் செலுத்தியதால் திருமணம் அப்படியே தள்ளிக்கொண்டு போய்விட்டது. 

என்னுடைய குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய பலம், ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை நான் எதிர்கொண்டதே இல்லை என்றிருக்கிறார். அதேபோல் தனக்கு 44 வயது ஒன்றும் இல்லை 43 தான் ஆகிறது என்று கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments