யாழில் தொடர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

யாழ்.வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து பெருமளவான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் தொடர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!
நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்ற தொடர் திருட்டு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சனா விமலவீரவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கரவெட்டி கிழக்கு, காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பல இடங்களில் திருடப்பட்ட ஒளிப்படக் கருவி,

தொலைக்காட்சிப் பெட்டி , காஸ் சிலிண்டர் 2, இரண்டு பவுண் சங்கிலிபோன்ற பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments