போகிற உயிர் போகத்தான் போகிறது, இறக்கப் போறேன் என்று தெரிந்தே அவர் போனார்- பிரபல நடிகர் குறித்து மகள்

நடிகர் குமரிமுத்துவின் மரணம் குறித்து அவரது மகள் பேசியுள்ளார்.

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரி முத்துவின் மகள் எலிசபெத் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘அப்பா ரொம்ப அன்பானவர். அப்பாவின் சிரிப்பு, தமிழ் புலமை எல்லாருக்கும் தெரியும். அவருடைய அன்பு குடும்பத்தினருக்கு மட்டும் தான் தெரியும். 

70 வயது வரை அப்பா சினிமாவில் இருந்தார். ஆயிரம் படங்களுக்கு மேல் பண்ணிருக்கார்.  தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களிலும் பண்ணிருக்கார்.  சினிமாவில் மட்டும் தான் அவர் அப்படி சிரிப்பார். அது ரொம்ப கஷ்டம் என அப்பாவே பலமுறை சொல்லியிருக்கிறார். 
போகிற உயிர் போகத்தான் போகிறது, இறக்கப் போறேன் என்று தெரிந்தே அவர் போனார்- பிரபல நடிகர குறித்து மகள்
அடி வயிற்றில் இருந்து சிரிக்க வேண்டுமாம். ஆனால், அவர் பொதுவாக அவ்வாறு சிரிப்பவர் அல்ல.  50 ஆயிரம் சம்பளம் வாங்கினால், 45 ஆயிரம் தானம் பண்ணிடுவார். வீட்டுக்கு 5 ஆயிரம் தான் வரும். ஒரு மாதத்திற்கு 40 குடும்பங்களுக்கு மாதம் மாதம் பணம் அனுப்புவார். அதற்காகவே ஒரு ட்ரஸ்ட் வைத்திருந்தார். அவர் தன் சம்பாத்யத்தை தான் மற்றவர்களுக்கு கொடுத்தார். யாரிடமும் வாங்கி கொடுக்கவில்லை.

ஆனால், அப்பாவிடம் அதிக உதவி வாங்கியவர்கள், அவர் இறப்பிற்கு கூட வரவில்லை. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று நினைத்து தான் மருத்துவமனையில் சேர்த்தோம். 

ஆனால் அதன் பிறகு தான் நுரையீரல் தொற்று பாதிப்பு என்பது தெரிந்தது. சிகிச்சை முடிந்து கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார்கள்.

ஆனால், கோவையில் ஊழியம் செய்வதற்கு அவர் டேட் கொடுத்திருந்தார். ‘போகிற உயிர் போகத்தான் போகிறது. அது ஊழியம் செய்யும் போது போகட்டும்’ என்று சொல்லிவிட்டு தான் அப்பா போனார்.

 இறக்கப் போறேன் என்று தெரிந்தே அவர் போனார். கோவை போயிட்டு வந்ததும் நேரா மருத்துவமனையில் சேர்த்தோம், 2 நாளில் இறந்துவிட்டார்,’’ எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments