சனிப்பெயர்ச்சி கொண்டுவரும் செல்வந்த யோகம்- மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் இராசிக்கார்கள்

மனிதர்கள் ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை கொடுக்கும் நிலையில், சில அறிகுறிகள் கெட்ட காலம் ஆரம்பமாகின்றதைக் குறிக்கின்றது.

இந்து சமயத்தில் சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகின்றார். ஒரு நபர் செய்யும் நல்ல மற்றும் கெட்ட செயலுக்கு ஏற்ப அவருக்கு சுப மற்றும் அசுப பலன்களை கொடுக்கின்றார்.
சனிப்பெயர்ச்சி கொண்டுவரும்   செல்வந்த யோகம்-  மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் இராசிக்கார்கள்
கும்பம் ராசியில் உள்ள சனிபகவான் இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி வக்ரமடைகிறார். நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்வார்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுககள் தங்கி பலன்களை கொடுக்கின்றார்.

சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும். தற்போது சனிபகவானின் வக்ர பெயர்ச்சி பார்வையால் யாருக்கு பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுனம்:

தற்போது ஒன்பதாவது இடமான கும்பராசியில் அமர்ந்திருக்கும் சனி பகவானின் பாக்கிய சனியால் எந்தவொரு தடை இல்லலாமல் காரியங்கள் நடைபெற்று வரும்.

ஆனால் ஜுன் 17முதல் சனிபகவான் வக்கிர காலம் என்பதால் வேலையில் சில தடைகள், அலைச்சல்கள், நிம்மதியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். யாருக்காகவும் கடனுக்கு கையெழுத்து போடாதீர்கள், கடன்நெருக்கடி அதிகரிக்கும். வழிபாடு என்னவெனில் சனிக்கிழமைகளில் சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கடகம்:

அஷ்டமத்து சனியால் அவதிப்படும் கடக ராசிக்காரர்களுக்குஇ சனியின் வக்ர பெயர்ச்சியினால், வேலைகள் சுலபமாக முடியும். எடுக்கும் முயற்சியில் ஆரம்பத்தில் தடை இருந்தாலும் பின்பு வெற்றி ஏற்படும்.

கணவன் மனைவி பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். சில காரியங்கள் பிரச்சனையில் ஏற்பட்டாலும் முடிவு சிறப்பாகவே அமையும். சனிபகவானால்  ராஜயோகத்தினை அடைய இருக்கும் உங்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சியாகவே இருக்கும். அதிலும் ஜுன் 17ல் சனிபகவான் வக்ரமடையும் நிலையில், உங்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.

தனுசு:

தற்போது மூன்றாவது வீட்டில் பயணிக்கும் சனிபகவான், இவரின் வக்ர சஞ்சாரத்தினால் உயர்கல்வி பயிலவும், வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். ஆனால் வயதானவர்கள் தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

தேவையில்லாமல் கடன் வாங்காமலும், புதிய முயற்சிகளில் அதிக கவனமுடன்  இருக்க வேண்டும். அலைச்சலும் அசதியும் கட்டாயம் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் வீடு நிலம் வாங்குவதுடன், மனைவிக்கும் வேலை கிடைக்கும். ஆனாலும் பாதிப்புகள் குறைய திருநள்ளாறு நள தீர்த்தக்குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கலாம்.

மகரம்:

மகர ராசியினை பொறுத்த வரையில் சனி பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இவர் வக்ரமடைந்து பின்னோக்கு செல்கையில் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

சொத்து பிரச்சினை நீங்கும். கைக்கு வராத பணம் வந்து சேரும். குடும்பத்தினரோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படுவதுடன்இ திடீர் திருப்பங்களும் ஏற்படும்.

கும்பம்:

கும்ப ராசியின் அதிபதியான சனிபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்றார். சனி வக்ரமடைவதால், சிறு தொழில்கள் வருமானத்தை கொடுக்கும். சிலர் முதலாளியாகவும் வாய்ப்பு வரும்.

மாணவர்கள் மேல்கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும். வேலை நிமிர்த்தமாக வெளிநாட்டு பயணம் ஏற்படும். உறவுகளிடம் கருத்துவேறுபாடு நீங்கி நட்பு உருவாகும். பிள்ளைகளுக்கு நல்ல காரியம் நடைபெறும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும். முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

மீனம்

மீன ராசியில் விரைய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானால் உங்களுக்கு ராஜயோக காலமாக அமையும். ஏழரை சனியில் விரைய சனியாக இருக்கும் இந்த கால கட்டத்தில் சனி பகவான் பின்னோக்கிச் செல்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் ஏற்படும். உறவினர்களால் நன்மை ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்த செல்லவும்.காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

Post a Comment

0 Comments