அவர் நம்பர் கூட இருக்கிறது , பேச தயக்கமாக இருக்கிறது- பிரபல நடிகை பற்றி வெளிப்படை ஆதங்கம்

தென்னிந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 
அவர் நம்பர் கூட இருக்கிறது , பேச தயக்கமாக இருக்கிறது-  பிரபல நடிகை பற்றி வெளிப்படை ஆதங்கம்
பின், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.ஹீரோவிற்கு ஜோடியாக மட்டும் நடிக்காமல்இ கதையின் நாயகியாகவும் இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கார்கி படம் கூட பாராட்டை பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா என்பவரை நடிகை சாய் பல்லவி மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதில்இ நடிகை சாய் பல்லவி மீது தனக்கு ஒரு கிரஷ் இருப்பதாகவும், அவருடைய செல்போன் நம்பர் தன்னிடம் இருந்தும் கால் செய்து சாய் பல்லவியிடம் பேச துணிச்சல் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அவர் மீது தனக்கு வெறும் கிரஷ் தான் என கூறிய குல்ஷன் தேவய்யா அதை தாண்டி வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 45 வயதாகும் நடிகர் குல்ஷன் தேவய்யா ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.

கடந்த 2012ஆம் ஆண்டு Kalliroi Tziafeta என்பவரை திருமணம் செய்த குல்ஷன் தேவய்யா தனது மனைவியை 2020ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments