அவங்க ரெண்டு பேரும் என்னை வாழவே விடல- பிரபல காமெடி நடிகர் ஆதங்கம்

காதல் பட காமெடி நடிகர் சினிமாவில் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

காதல் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் சுகுமார், இவர் தொடர்ந்து சில கமல் படங்களில் நடித்துள்ளார்.  ஆனாலும் இவர் நடித்த காதல் படத்தின் மூலம் தான் பரவலாக பேசப்பட்டார். தற்போது இவர் தனக்கு சினிமாவில் நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அவங்க ரெண்டு பேரும் என்னை வாழவே விடல- பிரபல காமெடி நடிகர் ஆதங்கம்
அதில், "கமல் நடித்த விருமாண்டி படத்தில் டைவ் அடிக்க ஆட்கள் வேண்டும் என அழைத்ததும் நான் அதில் டைவ் அடித்தேன்.

பின்னர், கமல் சார் என்னிடம் வந்து ஜிம்னாஸ்டிக் தெரியும்னு காட்டிக்காதிங்க அப்புறம் எல்லா படத்திலும் டைவ் அடிக்க கூப்பிடுவாங்க என்றார் அதனால் நிறுத்திவிட்டேன்" என்று கூறினார்.

மேலும் " வடிவேலு போல மிமிக்ரி செய்தேன், அதனால் சின்னத்திரை வடிவேலு என்று அழைத்தனர்.

பிறகு ஒரு நல்ல நடிகர் மற்றவர்களை போல் மிமிக்ரி செய்து காட்ட கூடாது என்றார் அதனால் அதையும் நிறுத்தினேன்" என்று கூறினார்.

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில்,  "சினிமாவில் ஒரு பக்கம் வடிவேலு டீம், ஒரு பக்கம் விவேக் டீம் என இரண்டு டீம் இருந்துச்சி. என்னால இந்த பக்கமும் போக முடியாது,  அந்த பக்கமும் போகமுடியாது, ஆறு, சச்சின், இங்கிலீஸ்காரன் போன்ற படங்களில் கமிட்டாகி ஷ_ட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டு திரும்பி வந்து இருக்கிறேன்.

அவங்க ரெண்டு பேரும் என்னை வாழவே விடல, நடிகர்களும் சில நேரம் அரசியல்வாதி போல நடந்து கொள்வார்கள்.


சினிமாவில் ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால் பெண்களுக்கு ரொம்ப மோசம்.

எல்லாத்துக்கும் சம்மதிக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் தான் உக்கார வேண்டும். இதில் நிறைய அரசியல் நடக்கும்" என்று கூறியுள்ளா
ர். 

Post a Comment

0 Comments