காதல் பறவைகளுக்கு விவாகரத்தா?- யார் கண்பட்டதோ என சாபமிடும் நெட்டிசன்கள்

அண்மையில் திருமணம் செய்து விவாகரத்து செய்துக்கொள்ளப் போவதாக வெளியான தகவல்களுக்கு தரமான பதில் கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்.
காதல் பறவைகளுக்கு விவாகரத்தா?- யார் கண்பட்டதோ என சாபமிடும் நெட்டிசன்கள்
தற்போது சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அடிப்படும் பெயர்தான் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதிகளின் பெயர் தான்.

தொலைக்காட்சிகளில் வி.ஜே வாக பணிபுரிந்து வந்த மகாலட்சுமி நாளடைவில் சீரியலில் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த வேளையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் எளிமையான முறையில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமத்திற்குப் பிறகு அடிக்கடி இருவரும் எங்கேயாவது சென்று ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் எப்போதும் ஜோடியாக போட்டோ போடும் ரவீந்திரன் அண்மையில் சோகமாக ஒரு புகைப்படத்தைப் போட்டிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டுள்ளனர் என புரளியை கிளப்பியிருக்கிறார்கள்  இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார் மகாலட்சுமி.அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, நீ என்னைச் சுற்றி கைகளை வைக்கும் போது, இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமே இல்லை என்று எனக்கு தெரியப்படுத்துகிறாய்.. நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் அம்மு எனப் பதிவிட்டிருக்கிறார்.

அவரின் பதிவிற்கு லவ் யூ பொண்டாட்டி என கமெண்ட் செய்திருக்கிறார் ரவீந்திரன்.

Post a Comment

0 Comments