மனைவியின் சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்த கணவன்- பணமின்மையால் நடந்த சோகச்சம்பவம்

மதவாச்சி பிரதேசத்தில் மனைவியின் சடலத்தை கணவன் குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள பணம் இல்லாத காரணத்தினால் வீட்டின் பின்புறம் குழி தோண்டி அவர் புதைத்துள்ளார்.
மனைவியின் சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்த கணவன்-  பணமின்மையால் நடந்த சோகச்சம்பவம்
50 வயதுடைய மனைவி உயிரிழந்ததையடுத்து, 39 வயதுடைய கணவன் இரகசியமாக வீட்டின் பின்பகுதியில் குழி வெட்டி புதைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய ரக்ஷித ருமேஷ் அத்தநாயக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த அசோக மாலானி என்ற பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தனது தாயாரை பார்க்க செல்வதாகவும், சில நாட்களாக அவர் வரவில்லை எனவும் அவரது உறவினர் ஒருவர் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, மதவாச்சி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்.

அவர் பயன்படுத்திய தொலைபேசி எண்ணை தற்போது வேறு நபர் பயன்படுத்துவதாக குடும்ப உறவினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட பொலிஸார் விசாரணைகளில் ​​குறித்த நபரும்,  50 வயது மதிக்கத்தக்க பெண்ணும் அனுராதபுரத்தில் உள்ள வீடொன்றில் முறையற்ற திருமணத்தின் அடிப்படையில் வசித்து வந்துள்ளனர் என்ற உண்மை வெளிவந்துள்ளது.

அந்த தொலைபேசி ஊடாக மாஸ்டர் எனக் கூறப்படும் 39 வயதுடைய நபரை மதவாச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வர பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்று பிற்பகல் 2.20 மணியளவில், மதவாச்சி பொலிஸாரால் கைது அவர் செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், தனது மனைவிக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், இதுகுறித்து தன்னிடம் கூறியதாகவும், கடந்த 27ம் திகதி மருந்து கொண்டு வருமாறு கூறியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கையில் பணம் இல்லாதமையால், அன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் மாத்திரைகளை கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  அப்போது சமையல் அறை சுவரில் மனைவி சாய்ந்த நிலையில் இருந்தார். அவரது கழுத்தை பிடித்து பார்த்தபோது இறந்துவிட்டார் என தெரியவந்தது. ​​

பணம் இல்லாததால்,  மனைவி வீட்டின் பின்புறம் 4 அடி குழியை வெட்டி தானே புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த மரணம் இயற்கையான மரணமா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,  மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை நேற்று மாலை அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments