Archive by category: கட்டுரைகள்

HomeArchive by category: கட்டுரைகள்

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியமனம்! தமிழ் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

வடக்கு மாகாணமானது எப்போதுமே அரசியல் ரீதியாக குறிவைக்கப்படும் ஒரு பிரதேசமாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக பெரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றார்கள். இதன் காரணமாக நீண்ட காலமாக அரசியல் ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் வடக்கு மாகாணம் அரசாங்கத்தினால் குறிவைக்கப்படுகின்றது. இருந்தபோதும் இலங்கை அரசாங்கத்தின் அரசியல் ரீதியான காய் நகர்த்தல்களுக்கு எதிராக வியூகம் வகுத்து செயற்பட முடியாத நிலையில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் அரசியல் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது. நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் …

மூன்று மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராகிய  துப்புரவு பெண் தொழிலாளி!இது கதையல்ல நிஜம்!

மூன்று மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராகிய  துப்புரவு பெண் தொழிலாளி 30 ஆண்டுகள் வெளிவராத ரகசியம் பிரிவு உபச்சாரத்தில் ஊருக்கு தெரிந்தது ஜார்க்கண்ட், ராஜ்புரா நகராட்சியில் பார்வையாளர்களை நெகிழ வைத்த சம்பவம், இது கதையல்ல நிஜம்… என்று சொல்ல வைத்திருக்கும் ஒரு சம்பவம். இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் விடுவார்கள். இப்படியும் ஒரு தாயா என்று ஆச்சரியக் கேள்வி எழுப்பி விழி ஓரம் திரளும் ஆனந்தக் கண்ணீரை துடைத்து மானசீகமாக அந்த தாயை வாழ்த்திக் கொண்டிருப்பார்கள். அந்தத் தாய் சாதாரண துப்புரவு …

பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறியது எப்படி!!

பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டது. கோய் ஆற்றின் கரையில் நிற்கும் எரிக் தூவின் முகம் வியர்வையில் மின்னுகிறது. ஆறும் மின்னுகிறது. அதன் மீது எண்ணெய்ப் படலம். என் பெற்றோர் மிகச்சிறந்த விவசாயிகள்” என்று சொல்லியபடியே ஆற்றோரம் இருக்கும் தனது வயல்வெளியைக் காட்டுகிறார். எங்கும் களைகள் மட்டுமே முளைத்திருக்கின்றன. கடலை, சோளம், மரவள்ளி, கருணைக் கிழங்கு என்று அனைத்தும் விளைந்த நிலம் அது. எங்களுக்குச் சாப்பிடுவதற்கும், விற்பதற்கும், சேமிப்பதற்கும் போதுமான விளைச்சல் இருந்தது. …

உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !

உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு ! முதல் பார்வைக்கு, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் ஊகிக்க முடியாததாகவும், மனித இனத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட தண்டனை போலவும் இருக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள சமூக பொருளாதார காரணங்கள் முக்கியமானவை இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவமே கொரோனா !                                   பகுதி 1 கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா …

சர்வதேச பிடிக்குள் இலங்கை! தப்பி பிழைக்குமா?

இலங்கைக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்த சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் வருகை காரணமாக, இலங்கை சர்வதேச அரசியலில் பரபரப்பு மிக்க நாடாக மாறியுள்ளது. அமரிக்கா மற்றும் இந்தியாவின் எதிரி நாடாக பார்க்கப்படும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜியத்தை சாதாரணமாக பார்க்க முடியாது. சீனா உலகத்தில் பெரும் வல்லரசாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவிற்கு போட்டி நாடாக இருக்கும் மேற்குலக முதலாளித்துவ நாடுகளின் வயிற்றில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை வருகையானது புளியை கரைத்துள்ளது. இலங்கை ஒரு சிறிய நாடு சீனாவின் ஒரு இராஜதந்திர …

உழுந்தின் இறக்குமதி விவசாயிகளை பாதிக்குமா?

உழுந்தின் இறக்குமதி விவசாயிகளை பாதிக்குமா? இலங்கை இந்திய தமிழ் பேசும் மக்கள் உட்பட பலரது உணவுக்கு உழுந்து முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முக்கியமாக தமிழ் மக்களின் உணவுப் பொருட்களான வடை, தோசை போன்ற உணவுப் பொருட்களுக்கு உழுந்து முக்கிய சேர் பொருளாக பயன்படுத்தப்பட்டு சுவையான மற்றும் பலமான உணவுப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவதால் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலைப் பாதுகாக்கின்றது. அத்துடன் தமிழர்களின் வீட்டு விசேசங்களில் உழுந்திலான வடை, தோசை மற்றும் இட்லி போன்ற சிற்றுண்டிகள் …

கவனயீனம் காரணமாக பலியெடுக்கும் விபத்துக்கள்! உயிரை இழக்கும் அப்பாவி பொதுமக்கள்!!

கவனயீனம் காரணமாக பலியெடுக்கும் விபத்துக்கள்! உயிரை இழக்கும் அப்பாவி பொதுமக்கள்!! இலங்கையில் விபத்தின் காரணமாக உயிரை இழக்கும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இலங்கையில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களை விட விபத்தின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் 2020 ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் கூட விபத்துக்களின் காரணமாக பலர் மரணமடைந்தனர். விபத்தின் காரணமா …

இரணதீவு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா??

இரணதீவு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?? (மயான பூமியாக மாறுகிறதா இரணைதீவு!!) இலங்கையின் வடக்கு பகுதியில் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றது. அந்தவகையில் இரணைதீவு என்னும் கிராமமானது கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பிரதேசங்களின் நிலத் தொடர்ச்சியிலிருந்து கடலுக்குள் இருபது கிலோமீற்றர் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இரணைதீவு அமைந்துள்ளது. வடக்கில் தீச்சுவாலையக பரவிய உள்நாட்டு போரானது இரணைதிவில் வசித்து வந்த 417 குடும்பங்களை சேர்ந்த மக்களையும் விட்டு வைக்கவில்லை. மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என அமைதியாக வாழ்ந்து வந்த மக்கள் …

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தமிழர்களுக்கு சாதகமானதா?கட்டுரை!

ஐநா மனித உரிமைகள் 46 வது கூட்டத்தொடர் தமிழர்களுக்கு சாதகமானதா? ஓர் ஏரிக்கரையில் கிழட்டு கொக்கு ஒன்று வசித்து வந்தது, அதற்கு ஏரியில் இறங்கி மீன்களை பிடித்து உண்ண முடியவில்லை. கொக்கு தந்திரமாக மீன்களை பிடிக்க ஏரியில் இறங்கி அமைதியாக நின்று கொண்டது. மீன்கள் கொக்கின் பக்கம் வந்தபோது கூட அது மீன்களை பிடித்து உண்ணவில்லை, இதனை பார்த்த நண்டு ஒன்று கொக்கிடம் ஏன் மீன்களை பிடிக்கவில்லை என கேட்க, எனக்கு உயிர்களை கொல்ல விருப்பமில்லை செய்த பாவங்கள் எல்லாம் பொதும் நான் அன்பாக …