Archive by category: இந்திய செய்திகள்

Homeசெய்திகள்Archive by category: இந்திய செய்திகள்

ஐஸ்கிறீம் விற்ற பெண் அதே ஊரில் காவல் துறை அதிகாரியாக பதவி ஏற்று சாதனை!!

குடும்ப கஷ்டம் காரணமாக அன்று ஐஸ் கிரீம் விற்றப் பெண் இன்று அதே ஊரில் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்று அசத்தியுள்ளார். அவரது சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனி சிவா தன்னுடைய 18 வயதில் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் மண வாழ்க்கை கசப்பாக முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கும் போது கணவர் விட்டுப்பிரிந்து சென்றுவிட்டார். ஆனிக்கு பெற்றோர்கூட ஆதரவளிக்கவில்லை. ஆனால் அவரது பாட்டி விட்டுப்போன படிப்பை மீண்டும் தொடங்கி வைத்தார். கல்வி …

பாலியல் தொந்தரவு குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் ரகசிய விசாரணை!

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொந்தரவு குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் நேரடியாக பள்ளி மாணவிகள் இருக்கும் இடத்திற்கே சென்று ரகசிய விசாரணை நடத்தப்படும். அவர்கள் காவல் நிலையம் வரத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைந்தகரை புல்லா அவென்யூ அருகே நடைபெறக்கூடிய வாகன சோதனையை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  (மே 29) திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பேரறிவாளனின் பரோல் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு-உயர் நீதிமன்றம்!!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனின் பரோலை மேலும் இருவாரங்கள் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் …

செல்வந்தர்கள் பாலிவூட் நடிகர்கள் இந்தியாவை விட்டு தப்பியோட்டம்!!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக அதிகரித்துள்ள பின்னணியில், அந்த நாட்டிலுள்ள செல்வந்தர்கள் தமது குடும்பத்தாருடன் தனி விமானங்களில் இந்தியாவை விட்டு தப்பித்து வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவிவரும் ஒக்சிஜன் தட்டுபாடு மற்றும் கட்டில் தட்டுபாடு உள்ளிட்ட காரணங்களினால், பாரிய நிதியை செலவிட்டு, அந்த நாட்டு செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிஇ இவர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. இதேவேளை, பாலிவூட் நடிகர்களும் தனி விமானங்களின் ஊடாக …

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது!!

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு (மரணத்திற்குப் பிந்தைய) பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது!! மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தைச் சோ்ந்த மறைந்த பிரபல பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமா் சின்சோ அபே உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்ற பேச்சாளா் சாலமன் பாப்பையா, தேசிய கூடைப்பந்து வீரா் பி.அனிதா, வில்லிசைக் கலைஞா் சுப்பு ஆறுமுகம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஆா்.எல்.காஷ்யப், புதுச்சேரியைச் சோ்ந்த …