Archive by category: உலக செய்திகள்

Homeசெய்திகள்Archive by category: உலக செய்திகள்

BREAKING NEWS -ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்திற்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம்!!

ஆப்கானிஸ்தான் − காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பாரிய வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், காபூலை விட்டு வெளியேற பெருமளவானோர் விமான நிலையத்தில் கடந்த பல நாட்களாக காத்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே, பாரிய வெடிப்புக்கள் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என …

ஆப்கானிஸ்தானில் ஒரு பெட்டியோடு மட்டுமே நாட்டை விட்டு போகலாம்! தீவிரவாதிகள் உத்தரவு!!

ஆப்கானிஸ்தானில் இருக்கும் தீவிரத்தன்மை, அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்கிற அவசரம், அங்கு சூழ்ந்திருக்கும் இருள் எல்லாமே தெரிகிறது. திரும்பும் திசை எங்கும் அமெரிக்கா மற்றும் பல நாட்டு சாம்பல் நிற ராணுவ விமானங்களே தென்படுகின்றன. வானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு விமானத்தைத் தொடர்ந்தும் பல நீண்ட வரிசைகளில் ஆஃப்கானியகளின் காத்திருக்கிறார்கள். அந்த மக்கள் வரிசைகள் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை முடிவதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களோடு ஒரே ஒரு பெட்டியையும், அணிந்திருக்கும் ஆடையோடு மட்டும் வரலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. …

அமெரிக்க விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்த கால்பந்து வீரர்!!

காபூல் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய அமெரிக்க அரசுக்குச் சொந்தமான விமானத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முயன்ற இளம் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 19 வயதான சாக்கி அன்வரி ஆப்கானிஸ்தான் தேசிய ஜூனியர் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர். அவர் எப்பொழுது உயிரிழந்தார் என்பது குறித்த மேலதிக தகவல்கள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் குடிமக்கள் மற்றும் தங்களுடன் இணைந்து …

இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு கலந்து பயன்படுத்துவதால் ஆபத்து! உலக சுகாதார அமைப்பு!!

டெல்டா வகை வைரஸ் திரிபு பாதிப்பு காரணமாக உலகளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இருவேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தும் நிலை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு கலந்து பயன்படுத்துவதால் ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவிக்கையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 2 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது சரியான நடவடிக்கை அல்ல. இது …

ஒரு முத்தத்தால் பதவியையும்,மனைவியையும் இழந்த பிரித்தானிய அமைச்சர்!!

பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார். அத்துடன் அவரின் மனைவியும் பிரிந்து சென்றுள்ளார் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தொடர்பான செய்தி தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை!காவல்துறை அதிகாரிக்கு 22 வருட சிறை!!

ஆபிரிக்க, அமெரிக்கரான ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) கொலைக் குற்றவாளியான முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 22 ஆண்டுகளும், 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ஒரு காவல் துறை அதிகாரியால் அமரிக்க கறுப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். டெரெக் சுவாவின் (Derek Chauvin) என்ற காவல்துறை அதிகாரி, மினியாபொலிஸ் (Minneapolis) நகர வீதியில் வைத்து, ஜோர்ஜ் ப்ளொய்டின் கழுத்தில், 9 நிமிடங்கள் முழந்தாளிட்டு அழுத்தியமையால் அவர் மரணித்தார். இந்த சம்பவத்தை அடுத்து, நிறவெறிக்கு எதிராகவும், காவல்துறையின் செயற்பாட்டுக்கு எதிராகவும் சர்வதேச …

ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக நைஜீரியாவில் பாடசாலைகள் மூடப்படுகின்றன.

ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக நைஜீரியாவில் பாடசாலைகள் மூடப்படுகின்றன.  நைஜீரியாவில் ஆதிக்கம் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்  . அத்துடன்பிற உள்ளூர் ஆயுதக் குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளும் ஆயுத குழுக்கள் பாடசாலை மாணவர்களை கடத்துவதுடன், கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளையும் திருடி வருகின்றனர். மேலும் ஆயுதக்குழுக்கள் பாடசாலை மாணவர்களை கடத்தி பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்கின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக நைஜீரியாவில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு …

லண்டனில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது!!

லண்டனில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது!! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் EPRLF) ஸ்தாபகர் தோழர் பத்மநாபா மற்றும் பன்னிரு தோழர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான யூன் 19ம் திகதியை உலகெங்கும் வாழும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள், உயிர் நீத்தவர்களின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இவ்வருடம்  31வது தியாகிகள் தினமான யூன் 19ம் திகதி சனிக்கிழமை மெய்நிகர் வழியாக தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. இதனை தொடர்ந்து லண்டன்  உள்ள …

நைஜீரியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழு ஆசியர்களை கடத்திச் சென்றுள்ளது!!

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கெபியில் உள்ள  பாடசாலைக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழு ஐந்து ஆசியர்களை கடத்திச் சென்றுள்ளது டன், போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.  *(அன்மை காலமாக  நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து செல்வதுடன் , அவர்கள் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை திருடுவதுடன், பாடசாலை மாணவர்களையும் கடத்தி செல்கின்றமை குறிப்பிடதக்கது.)

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது நெதன்யாஹுவின் 12 வருட கால ஆட்சி!!

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹுவின் 12 வருட கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதற்கமைய, அந்நாட்டின் புதிய பிரதமராக தேசிய வலதுசாரி கட்சியின் Naftali Bennett தெரிவாகியுள்ளார். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை அவர் இஸ்ரேலின் பிரதமராக செயற்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் யயர் லபிட்டிடம் (Yair Lapid) அவர் ஒப்படைக்கவுள்ளார். இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக பெஞ்சமின் நெதன்யாஹு 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக …