Archive by category: செய்திகள்

HomeArchive by category: செய்திகள்

வவுனியாவில் சமூக சேவையாளர் கதிர்காமராஜாவுக்கு அஞ்சலி!!

பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும் சமூகசேவையாளருமான மா. கதிர்காமராஜாவின்  ஆத்மாசாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியாவில் இன்று மாலை (09) நடைபெற்றது. வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சிமன்றம் மற்றும் எம்.ஜி.ஆர் நற்பணிமன்றங்களின் ஏற்பாட்டில் கோ.சிறிஸ்கந்தராஜா தலைமையில் குறித்த நிகழ்வு வவுனியா வாடிவீட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சமூக சேவையாளர் கதிர்காமராஜா தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தன. நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி க.தயாபரன், செ.சபாநாதன், க.கிருபாகரன், வவுனியா நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி, …

வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக முறைப்பாடு!!

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள், மற்றும் நோயாளர்களை பராமரிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது. வவுனியா வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவில் சிகிச்சைபெற வருகின்றவர்கள், மாதாந்த கிளினிக் சேவையை பெற வருகின்ற நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருகின்ற உறவினர்கள் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கொட்டகையில் வைத்து விசாரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுவதாக நோயாளர்கள் விசனம் வெளியிட்டனர். வவுனியா பொது வைத்தியிசாலை நிர்வாகத்தினால் கொரோனா பரவாமல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் காரணமாகவே நோய் தொற்று வேகமாக பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். வைத்தியசாலை …

வவுனியா திருநாவற்குளம் ‘யங்லைன்’ விளையாட்டுக் கழகத்தின் அலங்கார நுழைவாயில் திறப்பு விழா.!

வவுனியா திருநாவற்குளம் யங்லைன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என். வினோபிரகாஸ் தலைமையில் ‘யங்லைன்’ விளையாட்டுக் கழகத்தின் அலங்கார நுழைவாயில் இன்றையதினம் (25) திறந்து வைக்கப்பட்டது. அலங்கார நுழைவாயில் அமரர் யசோதரன் திவ்யா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தாரின் நிதி பங்காளிப்பிலும், நுழைவாயிலுக்கானா நீர் வடீகால் மதகு மற்றும் கிரவல் என்பன வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் நிதி மூலமும் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. ‘யங்லைன்’ விளையாட்டுக் கழகத்தின் அலங்கார நுழைவாயில், அமரர் யசோதரன் திவ்யாவின் குடும்பத்தின் உறவுகளால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் …

வவுனியா சண்முகானந்தா மகாவித்தியாலத்தில் சரஸ்வதி சிலை திறந்து வைப்பு!!

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை கல்லூரி அதிபர கணேசலிங்கம் தலைமையில் இன்று (23) திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டு சரஸ்வதி சிலையை திறந்து வைத்தார். பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் எஸ். தனஞ்சயனின் நிதிப்பங்களிப்பில் சரஸ்வதி சிலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்வின் முன்னதாக அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது. இந்நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி ரஞ்சித்குமார், பழைய மாணவர்சங்கத் தலைவர் (லண்டன் கிளை) ஞானேஸ்வரன், ஓய்வுநிலை …

மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் சர்வதேச மாற்று திறனாளிகள் தினமான, டிசம்பர் 03 மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டது. மாற்று திறனாளிகளின் சமூக, வாழ்வியல் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்வானது, மாந்தை மேற்கு வீகான் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் வெற்றிச் செல்வி சந்திரகலாவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு கலந்து கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு நிகழ்வினை கவிஞர் மன்னார் பெனில் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் …

எமது மக்களுக்கும் சுகந்திரமில்லை ஊடகவியலாளர்களுக்கும் சுகந்திரம் இல்லை – சாணக்கியன் சாடல்!

எமது மக்களுக்கும் சுகந்திரமில்லை ஊடகவியலாளர்களுக்கும் சுகந்திரம் இல்லை – சாணக்கியன் சாடல்! முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில்  ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது கடந்த 27ஆம் திகதி இராணுவத்தினர்  மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில்  தாக்குதல்  மேற்கொண்டுள்ளனர். இதன்போது …

இலங்கைக்குள் ‘ஒமிக்ரோன் வைரஸ் வருவதை தடுக்க முடியாது’

தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமிக்ரோன் புதிய கொவிட் வைரஸ் புறழ்வானது, இலங்கைக்குள் வருவதை தாமதப்படுத்த வேண்டும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். இந்த வைரஸ் இலங்கைக்குள் வருகைத் தரும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எந்தவொரு வைரஸ் பிறழ்வும், நாட்டிற்குள் வருவதை தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த வைரஸை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை நடத்தும் ஆய்வு கூட வசதிகள் இலங்கையில் உள்ளதாகவும், இது தொடர்பில் …

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் கோழைத்தனமாது! வவுனியா ஊடக அமையம் கண்டனம்!!

வடக்கில் முல்லைத்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வா மீது இராணுவத்தினர் நேற்று 27-11-2021 கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வா மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை, வவுனியா ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது. தனது ஊடக பணியின் நிமித்தம் வட்டுவாகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது சில இராணுவத்தினர் ஒன்றிணைந்து கோழைத்தனமாக தாக்குதலை மேற்கொண்டதானது ஒரு மனிதநேயமற்ற செயலாகவே இருக்கின்றது. ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையின் தொடர்ச்சியாகவே, இந்நடவடிக்கையை நோக்க கூடியதாக இருக்கின்றது. இராணுவத்தினரால் ஊடகவியலாளர் மீது …

வவுனியாவில் குடிநீர் தேவைக்காக குளாய் கிணறு அன்பளிப்பு!

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக புலம்பெயர் நிதிப் பங்களிப்பில் குளாய் கிணறு அமைக்கப்பட்டு இன்று (23) கையளிக்கப்பட்டது. செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காந்திநகர் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கான கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர் நிதியில் ஜனனம் நம்பிக்கை மையத்தின் ஏற்பாட்டில் குடிநீர் குளாய் கிணறு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஈலிங் சிறி கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பினூடாக நிர்மணிக்கப்பட்ட குடிநீர் பொது குளாய்கிணறானது, யாழ்ப்பாணம் சிவகுரு ஆதினத்தின் குரு, சிவசிறி வேலன் சுவாமிகளால் மக்கள் பாவனைக்காக …

வவுனியா பாவற்குளம் பெரும் போக பயிர்ச்செய்கைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது!

  வவுனியா பாவற்குளம் பெரும்போகம் பயிர்ச் செய்கைக்காக நீர் வினியோகம் இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி எல்.பி.ஈஸ்வரன் தலைமையில் பாவற்குளத்தில் பெரும் போக நெற் செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது. வருடா வருடம் பெரும்போக நெற் செய்கைக்காக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் இந்த வருடம் 4ஆயிரத்து 134 ஏக்கர் பெரும்போகம் செய்ய விவசாயிகள் எதிர்பார்த்துள்ளதாக பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்தார். பிரதேச நிர்ப்பாசன பிரிவு உதவியாளர் கஜமுகதாசின் ஏற்பாட்டில், கிராம மக்களின் ஒத்துழைப்புடனும், பூஜை வழிபாட்டுடனும் …